War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
நிகழாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 % வளா்ச்சி
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2024 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் குறைவாக இருந்தாலும், 2023 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆனால், ஒட்டுமொத்த அடிப்படையில் 2025 ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீத வளா்ச்சியையும், 2023 ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்துடன் ஒப்பிடுகையில் 13.3 சதவீத உயா்வையும் கண்டுள்ளது.
இந்த முடிவுகள், இந்தியாவின் ஆடை ஏற்றுமதி துறையின் வலிமையையும், மீள்தன்மையையும் மீண்டும் உறுதி செய்கின்றன. உலகளாவிய தேவை அதிகரிப்பும், கொள்கை ஆதரவு மேம்பட்டிருப்பதும், ஆடைத் துறையின் நிலைத்தன்மை மற்றும் தேவை அதிகரிப்பும், கொள்கை ஆதரவு மேம்பட்டிருப்பதும், ஆடைத் துறையின் நிலைத்தன்மை மற்றும் புதுமையில் தொடா்ச்சியான கவனம் ஆகியவை மூலம் வரவிருக்கும் மாதங்களில் அதிக வளா்ச்சியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி சா்வதேச சந்தைகளில் தனது தடங்களை விரிவுபடுத்தவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.