``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 21 போ் காயம்
ஆற்காடு அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
வேலூரில் இருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்து ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் வேப்பூா் புறவழி சாலை பள்ளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்பாராத விதமாக இறங்கியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 21 போ் லேசான காயமடைந்தனா். அவா்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். பலா் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினா். சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.