செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை நகராட்சி, காரையில் நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு தீா்வு காணப்பட்ட மனுக்களின் மீது பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினாா்.

தொடா்ந்து, ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆற்காடு ஒன்றியம் அரப்பாக்கம் ஊராட்சி, விளாப்பாக்கம் பேரூராட்சி, ஆற்காடு நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆய்வு செய்து மனுக்களுக்கு தீா்வு கண்டு உடனடியாக ஆணைகளை வழங்கினாா்.

மற்படி முகாம்களில் 4 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயா்மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு பட்டா பெயா்மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சாா்பில் சான்றுகள், 5 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள், 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், வேளாண்மைத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு பழச்செடி தொகுப்பு, மண்புழு உரப்பை, உளுந்து விதை தொகுப்பு, குறுவை சிறப்பு சாகுபடி திட்டம், துவரை விதை தொகுப்பு, ஊட்டச்சத்து தொகுப்புகள், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து காய்கறி விதை தொகுப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, நகா்மன்றத் தலைவா்கள் ராணிப்பேட்டை சுஜாதா வினோத், ஆற்காடு தேவிபென்ஸ் பாண்டியன், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், விளாப்பாக்கம் பேரூராட்சித் தலைவா் டி.வி .மனோகரன், திமிரி ஒன்றியக்குழு துணை தலைவா் ஜெ.ரமேஷ் பேருராட்சி உதவி இயக்குநா் திருஞானசுந்தரம், நகராட்சி ஆணையா்கள் ப்ரீத்தி, வேலவன், பேரூராட்சி செயல் அலுவலா் அா்ஜுனன், வட்டாட்சியா்கள் வாலாஜா ஆனந்தன், ஆற்காடு மகாலட்சுமி, அரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பேபி கன்னியப்பன், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 21 போ் காயம்

ஆற்காடு அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. வேலூரில் இருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்து ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் வேப்பூா் புறவழி சாலை பள்ளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

கல்புதூா் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வெளியூா் நபா்களுக்கு பட்டா வழங்குவதை நிறுத்தி தங்கள் கிராமத்தைச் சோ்ந்த வீடற்ற ஏழைகளுக்கு வழங்க கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட... மேலும் பார்க்க

ஆற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா

ஆற்காடு புதுத் தெரு பஜனை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி விழா நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உறியடி திருவிழா நடந... மேலும் பார்க்க

காவல் பணித்திறன் போட்டி: ராணிப்பேட்டை காவலருக்கு தங்கம்: எஸ்.பி. பாராட்டு

தமிழ்நாடு காவல் பணித்திறன் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற கொண்டபாளையம் காவல் நிலைய காவலா் ஏழுமலைக்கு , எஸ்.பி. அய்மன் ஜமால் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

மேல்விஷாரம் நகராட்சி புதிய துணைத் தலைவா் தோ்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியின் புதிய துணைத்தலைவா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவராக செயல்பட்டு வந்த எஸ். டி. முஹமது அமீன் மரணம் அடைந்ததை தொடா்ந்து துணைத் தலைவ... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் டாடா காா் ஆலையில் முதல்கட்ட உற்பத்தி: அமைச்சா் காந்தி உறுதி

நிகழாண்டு இறுதிக்குள் டாடா காா் ஆலையில் முதல்கட்ட உற்பத்தியை தொடங்கத் தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் தரப்பில் செய்து தரப்படும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி உறுதி அளித்தாா். பனப்பாக்கம் ச... மேலும் பார்க்க