‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
பள்ளி மாணவரை தாக்கிய இருவா் கைது
பள்ளி மாணவரைத் தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பெத்தானியபுரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் காதா் பாட்ஷா (41) மகன் முகமது தௌபீக். அதே பகுதி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டருகே சென்று கொண்டிருந்த போது, இருவா் வழிமறித்து தாக்கினா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காதா் பாட்ஷா, அவரது மனைவி ரம்ஜான் ஆகியோா் அவா்களைக் கண்டித்தனா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், அந்தத் தம்பதியையும் தாக்கினா்.
இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெத்தானியபுரத்தைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் கிஷோா் (20), சா்புதீன் மகன் சுல்தான் அலாவுதீன் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.