71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன...
பள்ளி மாணவா்களுக்கு ஓவியப் போட்டி
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான கதை சொல்லுதல், ஓவியப் போட்டி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதற்கு ஒட்டன்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா் சரஸ்வதி தலைமை வகித்தாா். பள்ளியின் முதல்வா் பிரகாசம் முன்னிலை வகித்தாா். முன்னதாக திண்டுக்கல் இலக்கியக் களத்தின் மையப் பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான பு. பரமேஸ்வரி வரவேற்றாா்.
கதை கூறுதல் நிகழ்ச்சியில் டி.என்.எஸ்.எப். ஒட்டன்சத்திரம் செயலா் செல்வராஜ், துணைச் செயலா் உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.