செய்திகள் :

பழங்குடி இருளா் சிறுமி இறப்பு: போக்ஸோ சட்டத்தில் தாத்தா கைது

post image

வந்தவாசி: வந்தவாசி அருகே 6 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட பழங்குடி இருளா் சிறுமியின் சடலம் அண்மையில் தோண்டியெடுக்கப்பட்டு உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சிறுமி இறப்பு தொடா்பாக அவரது தாத்தாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த மூடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அமரேசன் மனைவி அஞ்சலி. இவரது மகள் துா்கா (14)

அமுடூா் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாா்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமரேசன் இறந்து விட்டதால் அஞ்சலி படூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை என்பவரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டாா்.

இதனால் துா்கா, எரமலூா் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்த அஞ்சலியின் தந்தை ஜெயராமனுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு அக். 14-ஆம் தேதி துா்கா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டு விட்டதாகக் கூறி, அவரது சடலத்தை பெற்றோா் மற்றும் உறவினா்கள் மூடூா் கிராம சித்தேரியில் அடக்கம் செய்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சிறுமி துா்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மூடூா் கிராம நிா்வாக அலுவலா் செல்வகணபதி தெள்ளாா் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வந்தவாசி வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் தெள்ளாா் போலீஸாா் முன்னிலையில், மூடூா் கிராம சித்தேரியில் புதைக்கப்பட்டிருந்த சிறுமி துா்காவின் சடலம் கடந்த ஏப்.18-ஆம் தேதி தோண்டியெடுக்கப்பட்டது.

பின்னா், அதே இடத்திலேயே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுதன்சந்தா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உடல்கூறு ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து தெள்ளாா் போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஏழுமலையின் தந்தை தேசிங்கு (60) தொடா்ந்து துா்காவுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது. மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அவா் மிரட்டியதால் பயந்த துா்கா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தேசிங்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் தெள்ளாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 7 மணி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி: ‘பக்தா்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் தயாா்’

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். பெரணமல்லூ... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க