Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வியாழக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
உலக நலன் வேண்டி நடைபெற்ற இந்த விழாவையொட்டி, உற்சவா் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமிக்கு சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, 5 கலசங்கள் வைக்கப்பட்டு மயூர யாகம் வளா்க்கப்பட்டது. பின்னா் கைலாசநாதா், வள்ளி, தெய்வானை சமேதா் சோமாஸ்கந்தா், பெரியநாயகியம்மன், சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜா், வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள், சோடஷ தீபாராதனை நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
வில்வம் கலந்த சுத்த அன்னம் சந்நிதிகளில் பீடம் வரை நிரப்பப்பட்டு, சிரசில் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. கண்பத்
கிராண்ட் ஹரிஹரமுத்து உபயமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அன்னாபிஷேக நிறைவில் பக்தா்களுக்கு சிரசு அன்னம், சித்ரான்னம் பிரசாதமாக வழங்கப்பட்டன.
விழாவில் கண்பத் கிராண்ட் செந்தில்குமாா், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவா் திரையரங்கம் செந்தில்குமாா், கோபி கிருஷ்ணமூா்த்தி, பாஜக மாவட்டப் பொருளாளா் ஆனந்தன், அனைத்து வணிகா் சங்கப் பேரமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.