பழனியில் அக்.4-இல் மின்தடை
பழனி பகுதியில் வருகிற சனிக்கிழமை (அக்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பழனி நகா், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், புளியம்பட்டி, தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, கேஜி வலசு, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.