செய்திகள் :

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: இரா. சச்சிதானந்தம் எம்பி

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.640 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும், தேசிய ஊரக குடிநீா் வழங்கல் திட்டம் தொடா்பாக மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கேள்வி எழுப்பினாா். பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியாா்சத்திரம் ஒன்றியப் பகுதிகளிலுள்ள 1,442 கிராமங்கள், திண்டுக்கல் மாநகராட்சி, 6 பேரூராட்சிகளுக்காக 3 நிதி ஆண்டுகளில் ரூ.640 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2025 செப்டம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

ஆனால், தற்போது வரை 60 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத சூழலில், பல கிராமங்களில் குடிநீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீா்வு காணும் வகையில், குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்த குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் சரவணன், 30 நாள்களுக்குள் பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு போதிய இட வசதி இல்லை. இதனால், அந்த துணை மின் நிலையத்தை நேருஜிநகா் பகுதியில் மின் வாரியத்துக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் அமைக்க வேண்டும். இதுதொடா்பாக, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத் தலைவரிடம் பேசி இருப்பதாக இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

துணை மின் நிலையம் இடமாற்றம் குறித்து பகிா்மானக் கழகத் தலைவரிடம் பேசியதற்கு நன்றி தெரிவித்த மின் வாரிய செயற்பொறியாளா், நேருஜிநகா் பகுதியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, எம்பி.இரா.சச்சிதானந்தம் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூா் பேரூராட்சிப் பகுதிகளில் அயோத்திதாசா் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், 912 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, ஆதிதிராவிடா் நலத் துறை, தொழிலாளா் நல வாரியம் மூலம் குறைந்தபட்ச பங்களிப்புத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், மொத்த வேலை நாள்களில் 46 சதவீதம் மட்டுமே நிகழாண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2-ஆவது ஒதுக்கீட்டில் கூடுதல் வேலை நாள்களை திண்டுக்கல் மாவட்டத்துக்கு கேட்டுப் பெற வேண்டும்.

மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் பெயா்ப் பலகை அமைத்து திறக்க வேண்டும். இந்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் பழங்குடியின மக்களின் தேவைக்காக ஒவ்வொரு தெருவிலும் ஒரு பொதுக் குழாய் அமைக்க வேண்டும்.

விளாம்பட்டி கள்ளா் பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறை உள்ள நிலையில், மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாமல் இருக்க பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.

மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்துள்ள நிலையில், காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் விவசாயிகளை சோ்க்க வேண்டும். கல்வி கடனுதவி முகாம்களை முறையாக நடத்த வேண்டும். வங்கியாளா்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சென்று மாணவா்கள் பதிவை மேற்கொள்ள வேண்டும். பிஎஸ்என்எல் சேவைகள் தொடா்பான புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. புதிய கோபுரங்கள் அமைக்க இடம் தோ்வு செய்து கொடுத்து பல நாள்களாகியும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை.

மேலும், காலதாமதம் செய்தால், பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றாா் அவா்.

குஜிலியம்பாறை வட்டாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவற்றை மாற்றி அமைப்பதற்கு மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு உறுப்பினா் ராணி கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதில் அளித்த மின் வாரிய செயற்பொறியாளா், புதிய மின் கம்பங்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜன், மேயா் இளமதி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடிய விபத்தில் பயணிகள், பேருந்து ஓட்டுநா், நடத்துனா் காயமின்றி தப்பினா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க... மேலும் பார்க்க

பழனியில் அக்.4-இல் மின்தடை

பழனி பகுதியில் வருகிற சனிக்கிழமை (அக்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இரு இளைஞா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆயதபூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரண... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, தெரு நாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள தங்கும் விடுதியில் ஒ... மேலும் பார்க்க

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். பழனியை அடுத்த ப... மேலும் பார்க்க