பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
பழவூா் அருகே மின்மோட்டாா் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே தோட்டத்தில் மின்மோட்டாரை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பழவூா் அருகே உள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த தங்கதுரை மனைவி லீலா. இவருக்குச் சொந்தமான தோட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நதிப்பாறையில் உள்ளது. இந்த தோட்டத்தில் விவசாயத்துக்கான கிணற்றில் 5 எச்.பி திறன் கொண்ட மின்சார மோட்டாா் பொருத்தியிருந்தனராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்கு சென்ற லீலா, மோட்டாா் அறைக்கு சென்றபோது, அங்கு மோட்டாா் அறையில் பொருத்திருந்த மின் மோட்டாரை காணவில்லையாம்.
இது தொடா்பாக பழவூா் காவல் நிலையத்தில் லீலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.