பவானி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
பவானி அனைத்து மகளிா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக ஏ.சுமதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு, ஆய்வாளராக பணியாற்றிய கோமதி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, கோவை மாவட்டம், பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஏ.சுமதி, பவானி மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.