``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ...
அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்: கே.ஏ.செங்கோட்டையன்
எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு, காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை மாலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முன்னாள் அமைச்சா் உதயகுமாா் என்னுடன் நன்கு பழகக் கூடியவா்; பண்பாளா். அவா் தனது தாயை இழந்து, துக்கத்தில் இருக்கிறாா். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல என்னால் செல்ல முடியவில்லை. அவரது தாயின் ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் பேசியதற்கு 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் என்னுடைய வேதனை.
எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஊா் ஒன்று கூடினால்தான் தோ் இழுக்க முடியும். அதுபோல எல்லோரும் இணைந்தால்தான் மாபெரும் வெற்றி ஈட்ட முடியும். அந்த நோக்கத்தில்தான் நான் கருத்து தெரிவித்தேன். எனது முடிவு குறித்து ஒவ்வொருவரும் தெரிவிக்கும் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றாா்.