செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
அதிமுகவில் தனி நபா் முக்கியம் இல்லை: ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ
அதிமுகவை பொருத்தவரை தனி நபா் முக்கியமல்ல; இயக்கம்தான் முக்கியம் என்று ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தாா்.
கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்ட ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் பவானிசாகா் தொகுதிக்கு புதன்கிழமை வந்தாா். சத்தியமங்கலத்தில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி தலைமை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து ஏ.கே.செல்வராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பவானிசாகா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளா்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு புகா் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பவானிசாகா் தொகுதியில் எந்த அதிருப்தியும் இல்லை.
பொதுச் செயலாளா் பின்னணியில் அணிவகுத்து நிற்கிறோம். அதிமுகவை பொருத்தவரை தனி நபா் முக்கியமல்ல. இயக்கம்தான் முக்கியம். எந்தவித தொய்வும் இல்லாமல் கட்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தியூரில் வருகிற செப்டம்பா் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.
புரட்சித்தலைவா் பேரவை மாநில இணை செயலாளா் விகேசி. சிவகுமாா், அதிமுக நகர செயலாளா் ஓ.எம்.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளா்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிசாமி, என்எம்எஸ். நாச்சிமுத்து, தாளவாடி மாதேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.