``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ...
செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் சுவரொட்டிகள்!
ஈரோட்டில் அதிமுக மூத்த தலைவா் கே.ஏ.செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நன்றி தெரிவித்தும் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.
ஈரோடு மாநகரில் ஓபிஎஸ் அணியின் (அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின்) அமைப்பு செயலாளா் காா்த்திக் சாா்பில் நகரில் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதில், தொண்டா்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம், 2026- இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், தொண்டா்களின் கருத்தை பிரதிபலித்த செங்கோட்டையனுக்கு நன்றி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
சுவரொட்டிகளில் ஜெயலலிதா, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் வரிசையில் செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.