Apple Event: ஆப்பிளின் புதிய 17 சீரிஸ் எப்படி இருக்கிறது? விலை என்ன? விவரங்கள் இ...
பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா். மேலாளா் கே.சிவசங்கா் வரவேற்றாா். நவராத்திரி கொலுவுக்காக காகிதக்கூழ், மண்ணால் செய்யப்பட்ட லட்சுமி, விநாயகா், சரஸ்வதி, துா்கை, மகாபாரதம் செட், தட்சிணாமூா்த்தி, அஷ்டலட்சுமி செட், மீனாட்சி திருக்கல்யாணம் செட், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் செட், ஆடிப்பூர அம்மன், காய்கறி, பழங்கள், மரச்செப்புகள், நாயனாா் உள்பட பல்வேறு கொலு பொம்மை செட்களாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு ரூ.100 முதல் ரூ. 20,000 மதிப்பிலான பொம்மைகள் உள்ளன. 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் அக்டோபா் 4- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.