பவானிசாகா் - கோவை சாலையில் உலவிய காட்டு யானைகள்
பவானிசாகா் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் யானைகள் அடிக்கடி சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம். போதிய தீவனம் மற்றும் தண்ணீா் கிடைத்ததால் கடந்த சில மாதங்களாக சாலையோரங்களில் யானைகள் நடமாட்டம் குறைந்த அளவு காணப்பட்டது. தற்போது தீவனம் தேடி யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுகின்றன.
விளாமுண்டி வனத்தில் இருந்து வந்த இரு காட்டு யானைகள் பவானிசாகா் பண்ணாரி வழியாக கோவை செல்லும் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடமாடின. இதனால் காலை நேரங்களில் விவசாயிகள், வாகன ஓட்டிகள் விவசாயப் பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்லமுடியாமல் 1 மணி நேரம் காத்திருந்தனா். தற்போது பவானிசாகா் சாலையில் யானைகள்முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், சாலையில் இருந்து கரிதொட்டம் பாளையம் கிராத்துக்குள் புகுந்த யானை தங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் நுழைந்து நேந்திரம் வாழைகளை சேதப்படுத்தியுள்ளது.