Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' ...
பாகிஸ்தானில் பஞ்சாப் பயணிகள் சுட்டுக்கொலை! என்ன நடந்தது?
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
பலோசிஸ்தான் வழியாக செவ்வாய்க்கிழமை(பிப்.18) நள்ளிரவு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் சக்கரங்களை வெடிக்கச் செய்த ஆயுதமேந்திய மர்மநபர்கள் சிலர், பேருந்திலிருந்த பயணிகளின் அடையாளங்களை பரிசோதனையிட்டுள்ளனர்.
அவர்களுள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 7 பேரை மட்டும் தனியே அழைத்துச் சென்றதுடன், அவர்களை வரிசையாக நிற்க வைத்து அதன்பின், ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த பலோசிஸ்தான் பகுதியானது, பிரிவினைவாத பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்து காணப்படும் இடமாகும். இந்த நிலையில், பேருந்து பயணிகளை சுட்டுக் கொன்றவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.