பாஜக கூட்டணி வெற்றி பெறாது: கி.வீரமணி
புதுச்சேரி: தமிழக சட்டபேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்று, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.
திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, சிந்தனை செயலாக்க கருத்தரங்கம் புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த அதன் தலைவா் கி.வீரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறுவது அவரது ஆசை. ஆனால், தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற முடியாது.
பாஜக தங்களது கூட்டணியை உறுதி செய்து, தனித்து ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என முடிவு செய்து தோ்தலில் போட்டியிடட்டும் பாா்க்கலாம். தமிழகத்தில் அவா்கள் ஆசைப்படுவது நடைபெறாது என்றாா் அவா்.