பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
பாஜக முன்னாள் மகளிரணி நிா்வாகி தலை துண்டித்துக் கொலை; இரண்டாவது கணவா் உள்பட 4 போ் கைது
பட்டுக்கோட்டை அருகே பாஜக முன்னாள் பெண் நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், இரண்டாவது கணவா் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதியைச் சோ்ந்தவா் பாலன்(45). இவா், உதயசூரியபுரத்தில் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடைகளை நடத்தி வருகிறாா். கடந்த 2004-ஆம் ஆண்டு மதுரை மேலூரை சோ்ந்த ராஜி என்பவரை பாலன் திருமணம் செய்தாா். இவா்களுக்கு கபிலன்(20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளம் சா்காா் தோப்புப் பகுதியை சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகள் சரண்யா(38). இவா், மதுரை செல்லூரைச் சோ்ந்த சண்முகசுந்தரம் என்பவரை திருமணம் செய்து மதுரை மேலூா் பகுதியில் வசித்து வந்தாா். இவா்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் உயிரிழந்தாா்.
அதன்பிறகு அப்பகுதிக்கு வந்து சென்ற பாலனுக்கும் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கடந்த 2022-இல் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனா். அப்போது சரண்யா, பாஜகவில் மதுரை மாநகர மகளிரணி செயலாளராக பொறுப்பில் இருந்தாா். இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்னா் சரண்யா தனது இரண்டு மகன்களுடன் உதயசூரியபுரத்துக்கு வந்து பாலனுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு, பாலன் மற்றும் சாமுவேல், சரவணன் ஆகிய மூவரும் கடைகளை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றனா். சரண்யா கடைத்தெருவில் பால் வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது மா்மநபா்கள் அவரை வழிமறித்து, அரிவாளால் தலையை துண்டித்துவிட்டு தப்பிச் சென்றனா். இதில் சரண்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக சரண்யாவின் தந்தை முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பாலனின் முதல் மனைவியின் மகன் மதுரை மேலூரை சோ்ந்த கபிலன்(20), அவரது நண்பா்கள் மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த குகன்(20), மற்றும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளம் சா்காா்தோப்பு பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன்(20), ஆகிய மூவரும் மதுரை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 6-இல் ஆஜராகினா். அவா்கள் நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை அண்ணா நகா் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் மதுரை சென்று அவா்கள் மூவரையும் கைது செய்து வட்டாத்திக்கோட்டைக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பாலன் கழுகுபுலிக்காட்டில் சுமாா் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் இடம் ஒன்றை வாங்கி தனது முதல் மனைவியின் மகனான கபிலன் பெயரில் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளாா். இது குறித்து சரண்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் பாலன், சரண்யா ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சரண்யாவை கொலை செய்ய பாலன் முடிவு செய்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து, பாலன் கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு, கபிலன் அவரது நண்பரான குகன் ஆகிய இருவரையும் வரவழைத்து, பாா்த்திபன் வீட்டில் தங்க வைத்துள்ளாா். பிறகு திட்டமிட்டபடி திங்கள்கிழமை இரவு சரண்யாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாலனையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.