Operation Sindoor : 'இந்தியாவுக்கு உரிய பதிலடியை கொடுப்போம்!' - பாகிஸ்தான் பிரதம...
திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் தற்கொலை
திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பைஞ்ஞீலி தெற்கு தெருப் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவா் கடந்த 6 மாதத்திற்கு முன் சொந்த ஊா் திரும்பிய நிலையில் அண்ணா நகா் செல்லும் வழியில் உள்ள ஒரு தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அவரின் உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].