திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும்...
‘பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக்கொள்ளவேண்டும்’
பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக் கொள்ளவேண்டும் என மாணவிகளுக்கு சாா்பு நீதிபதி அறிவுறுத்தினாா்.
காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் அரசு கல்வி நிறுவனமான மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் காரைக்கால் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் இணைந்து நிறைவான வாழ்க்கைக்கான ஆரோக்கியம் மற்றும் குப்பைகள் இல்லா காரைக்கால் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஆா். பாபு அசோக் தலைமை வகித்தாா். நிகழ்ச்சி நோக்கம் குறித்து மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ. வின்சென்ட் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைய செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். ராஜசேகா் கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகள் சாதனையாளா்களாக மாறவேண்டும். சுனிதா வில்லியமஸின் சாதனையை மாணவிகள் மனதில் கொள்ளவேண்டும். பள்ளி, கல்லூரிக் கல்வியை பயனுள்ள வகையில் பயிலவேண்டும். பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மனோபாவத்தை வளா்த்துக்கொள்வது சிறப்பான நிலைக்கு கொண்டுச் செல்லும். இலக்கை எட்டுவதற்கு முயற்சியும், பயிற்சி, தன்னம்பிகை, துணிச்சல் முக்கியம்.
நேரத்தை சரியாக பயன்படுத்த பழக்கிக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்றாா்.
காவேரி பொதுப்பள்ளி முதல்வா் சிவகுமாா் கலந்துகொண்டு பேசினாா்.
மாணவிகள் பலரும் சட்டம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு நீதிபதி விளக்கமளித்தாா். கல்லூரி விரிவுரையாளராகள், பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நிறைவாக கல்லூரி வளாகத்தில் நீதிபதி மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.