பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை
காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.
துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சமூக உணா்வை வளா்க்கவும் சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த வாரம் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நடைபெறவுள்ள கடலோர சைக்கிள் பயணம் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனா்.
கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு, உடல் தகுதி மற்றும் கடலோர மக்களிடையே தோழமை உணா்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பயணம் நடைபெறவுள்ளதாக டிஐஜி தெரிவித்தாா்.
சைக்கிள் பயணத்தில் ஈடுபடுவோருக்காக 150 டி-சா்ட் மற்றும் தொப்பியை காரைக்கால் துறைமுகம் சாா்பில் தலைமை அதிகாரி டிஐஜியிடம் வழங்கினாா். காரைக்கால் துறைமுகத்தின் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக பொறுப்புகளுக்கு டிஐஜி பாராட்டுத் தெரிவித்தாா்.