தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
பாதுகாப்பு உபகரணங்களுடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்
சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் சுகாதாரப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆணையா் மா.இளங்கோவன், பாதுகாப்பு உபகரணங்களுடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.16-இல் உள்ள தூய்மைப் பணியாளா்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து, குப்பை சேகரிக்கும் பணியின்போது வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும், குப்பைகளை சேகரிக்கும்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை பாா்வையிட்டு, தண்ணீா், மின் வசதி குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தை பாா்வையிட்டு, நாராயண பிள்ளை தெருவில் கழிவுநீா் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக சரிசெய்து கழிவுநீா் தடையின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், செயற்பொறியாளா் (திட்டம்) எம்.பழனிசாமி, உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், மாமன்ற உறுப்பினா் கோ.கு.மா. வசந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா்.