சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமி...
பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் முதல் ரயில் இயக்கம்! வெளியானது அறிவிப்பு
சென்னை: புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்துத் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மார்ச் மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்தது போலவே, பிரதமர் நரேந்திர மோடி, பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்றும், மார்ச் மாதம் என்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் தேதியும் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இருந்த பாம்பன் ரயில் பாலம் சேதமடைந்து, பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி ரூ.550 கோடியில் தொடங்கியது.
கட்டுமானப் பணிகள் முடிந்து, ரயிலை இயக்கியும் கப்பல்கள் வரும் போது பாலத்தை உயர்த்தியும் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாம்பன் பாலம் திறப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முதலில் ஜனவரி என்றார்கள், பிறகு பிப்ரவரி இறுதி என்று தகவல்கள் வெளியாகின. பாலத்தைத் திறக்கக் கோரி ஒரு பக்கம் போராட்டங்களும் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், மார்ச் மாதம் பாம்பன் பாலம் திறக்கப்படும் என்றும், பிரதமர் மோடியே பாலத்தை திறந்து வைக்க விருக்கிறார் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.