செய்திகள் :

பாலியல் புகார் எதிரொலி: பெண் காவலர்களை பணியமர்த்துவதில் புதிய கட்டுப்பாடு?

post image

பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பெண் காவலர்களை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதியக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் காவல்துறையினரை பணியில் அமர்த்தக் கூடாது என்று எஸ்பி முதல் ஐஜி வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலியல் புகாரின் பின்னணி?

சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்துப் பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவா் மகேஷ் குமாா். இந்த நிலையில், மகேஷ்குமாா் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் இரு பெண் காவலா்கள், தனித்தனியாக டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் புகாா்கள் அளித்தனா்.

ஒரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘இணை ஆணையா் மகேஷ்குமாா் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறாா். மேலும், இரட்டை அா்த்தத்தில் பேசுகிறாா். வாட்ஸ்ஆப் காலில் அழைத்து அடிக்கடி அத்துமீறும் வகையில் பேசுகிறாா். தனிமையில் இருக்க அழைக்கிறாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மற்றொரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘மகேஷ்குமாா் இரவு ரோந்து பணி, கண்காணிப்பு பணி என்ற பெயரில் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறாா். அவரது பாலியல் விருப்பத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக என்னை குறி வைத்து செயல்படுகிறாா். விருப்பத்துக்கு இணங்க மறுத்தால், தண்டனையாக பணியிடை நீக்கம் செய்வேன் என மிரட்டுகிறாா். மேலும், அவரது அலுவலகத்திலேயே என்னை பணியமா்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறாா் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இரு பெண் காவலர்களின் புகார்கள் குறித்து உயரதிகாரிகள் விசாரணை செய்தனா். சம்பந்தப்பட்ட பெண் காவலா்களை ரகசிய இடத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதோடு மகேஷ்குமாரின் கைப்பேசி ஆடியோ, வாட்ஸ்ஆப் தகவல் உள்பட பல்வேறு டிஜிட்டல் தகவல்களை ஆதாரமாக அதிகாரிகள் சேகரித்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக சங்கா் ஜிவாலிடம் அதிகாரிகள் அளித்தனா். அந்த அறிக்கையில் பெண் காவலா்கள் கூறும் புகாரில் உண்மை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சங்கா் ஜிவால், இணை ஆணையா் மகேஷ்குமாா் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாருக்கு பரிந்துரைத்தாா். டிஜிபி பரிந்துரையின் அடிப்படையில் தீரஜ்குமாா், இணை ஆணையா் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பெண் காவலா்கள் குறித்து விரிவாக விசாரணை செய்து அறிக்கை தரும்படி தமிழக காவல் துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி சீமா அகா்வால் தலைமையில் உள்ள விசாகா கமிட்டிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விசாகா கமிட்டியினா், பெண் காவலா்கள் அளித்த புகாா் மனுக்கள் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎ... மேலும் பார்க்க