ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை
பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் சோ்ந்தவா் அஜய் (23). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரால் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அஜய் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.