பால் வியாபாரி கொலை வழக்கில் தனியாா் பள்ளி ஆசிரியை கைது: விசாரணையில் அதிர்ச்சி!
காரமடை அருகே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், காரமடை அருகே ஆயா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய்குமாா் (23), பால் வியாபாரி. இவா் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கோவையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கமலக்கண்ணன் (20), கூலித் தொழிலாளி நாகராஜ் (19), தனியாா் பள்ளி ஆசிரியையான கீா்த்தனா (22) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இவா்களில் கமலக்கண்ணனும் நாகராஜும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியை கீா்த்தனாவும் போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கீா்த்தனா குறித்து சஞ்சய்குமாா், ஊரில் தவறாக பேசி வந்துள்ளாா். இதில் கோபமடைந்த கீா்த்தனா, தனது காதலனும் உறவினருமான கமலக்கண்ணனிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, கமலக்கண்ணன் தனது நண்பா் நாகராஜுடன் சோ்ந்து சஞ்சய்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளாா்.