இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
பிசிசிஐ முடிவு சரியா? கருண் நாயர் பாவம், சாய் சுதர்சனை பாராட்டிய அஸ்வின்!
மான்செஸ்டர் அணியில் கருண் நாயரை நீக்கியது குறித்து முன்னாள் வீரர் ஆர். அஸ்வின் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தப் போட்டியில் கருண் நாயருக்குப் பதிலாக சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டார்.
ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடிய கருண் நாயருக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இரண்டாவது டெஸ்ட்டில் நம்.6-இல் களமிறங்கி 0, 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாவது டெஸ்ட்டில் நம்.3-க்கு மாற்றப்பட்டு 4, 14 ரன்கள் எடுத்தார்.
கடைசி 6 இன்னிங்ஸில் 131 ரன்கள் எடுத்துள்ள கருண் நாயரின் சராசரி 21.83ஆக இருக்கிறது.
இது குறித்து ஆர்.அஸ்வின் பேசியதாவது:
அதிர்ஷ்டமற்ற கருண் நாயர்
கருண் நாயர் இதுவரை நம்.3-இல் விளையாடியதே இல்லை. தற்போது, திடீரென அவரை அந்த இடத்தில் விளையாட வைப்பது அவருக்கு மனத்தடை ஏற்பட்டிருக்கும்.
இந்த நிலையில், சாய் சுதர்சனுக்கு நாம் பாராட்டைத் தெரிவித்தே ஆக வேண்டும். 1-2 என தொடரில் பின் தங்கிய நிலையில் இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததை சிறப்பாக உபயோகித்துக் கொண்டார்.
நம்.3 இடத்தை சாய் சுதர்சன் பிடித்துக் கொண்டார். வருங்காலத்தில் இந்திய அணிக்கு வலுவான நிலையை ஏற்படுத்துவார்.
நம்.3 சாய் சுதர்சனுக்குதான்
புஜாரா, டிராவிட் நம்.3-இல் விளையாடியுள்ளார்கள். அவர்கள் விளையாடிது போன்றே சாய் சுதர்சனும் விளையாடுகிறார். அவரால் பந்தினை சரியாக விட முடிகிறது.
விக்கெட் நன்றாக இருந்தாலும் கடினமான சூழ்நிலையை தாண்டிவிட்டார். அவ்வளவு ரன்களை அடிக்க அவருக்கு உரிமை இருக்கிறது.
சாய் சுதர்சனின் நல விரும்பியாக அவர் சதம் அடிக்காமல் விட்டதில் எனக்கு சிறிது வருத்தம் இருக்கிறது. அவருக்கு ரன்கள் குவிக்க மிகுந்த பசி இருக்கிறது. சதம் அடிக்கும் நல்ல வாய்ப்பை சாய் தவறவிட்டார் என்றார்.
முதல்நாள் முடிவில் இந்திய அணி 264/4 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் ரிடையர் அர்ட் முறையில் வெளியேறியது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.