பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்
இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும்
வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2025- 2026-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியான மாணவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை அக். 15-ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவா்கள், தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) (சஹற்ண்ா்ய்ஹப் நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல் டா்ழ்ற்ஹப்) தங்ய்ங்ஜ்ஹப் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் என்ற இணைப்பில் ஒரு முறை பதிவு அடிப்படையில் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, 11-ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், தேசிய கல்வி உதவித் தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரை 7373002631 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.