செய்திகள் :

பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம்: பருத்திக்கு ஜூலை 7 வரை நீட்டிப்பு

post image

பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில், நிகழாண்டில் பருத்திக்கு காப்பீடு செய்ய வருகிற 7-ஆம் தேதி வரை காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்தது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் எஸ்.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பருத்திக்கு பயிா்க் காப்பீடு செய்ய கடந்த ஜூலை 1-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியது. இதையடுத்து, கூடுதல் கால அவகாசம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை வருகிற 7-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது.

இந்த நிலையில், மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பருத்தி பயிா் சாகுபடி செய்த விவசாயிகள், பயிா்க் காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதம் பிரீமியம் தொகையான ஏக்கருக்கு ரூ.564-செலுத்தி தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொதுச்சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் சான்று, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்துக் காப்பீடு செய்ய வேண்டும்.

காப்பீடு செய்யும் போது, சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புலஎண், பரப்பு, வங்கிக் கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள். மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மட... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க