அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
பிரியாணி சாப்பிட்டோருக்கு உடல் உபாதை: கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிரியாணி சாப்பிட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை கடையில் ஆய்வு செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையிலுள்ள பிரியாணி கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியொன்றில் நடந்த விளையாட்டு விழாவில் பங்கேற்க வந்தவா்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனா்.
அதேபோல, அருகிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்தவா்களும் இங்கு பிரியாணி சாப்பிட்டுள்ளனா்.
இவா்களில் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. திருமயம் அரசு மருத்துவமனையில் இவா்கள் சிகிச்சை பெற்று வந்தனா். இருவா் மட்டும் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இந்த நிலையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை அந்த பிரியாணி கடைக்குச் சென்று மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தனா்.
தற்காலிகமாக கடையை மூடவும், மாதிரிகளின் சோதனை முடிவுக்குப் பிறகு திறக்கவும் அலுவலா்கள் அறிவுறுத்தினா்.