பிரேம்ஜி நடிக்கும் ’வல்லமை’... டீசர் வெளியீடு!
நடிகர் பிரேம்ஜி அமரன் நடித்துள்ள வல்லமை திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் பிரேம்ஜி அமரன். இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர் கடைசியாக விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் நடித்திருந்தார்.
இவர் இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கி, தயாரிக்கும் ‘வல்லமை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் திவ்ய தர்ஷினி, தீபா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.கே.வி இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | சிம்பு குரலில் ‘டீசல்’ இரண்டாம் பாடல் வெளியீடு!
இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் கருப்பையா முருகனே எழுதியுள்ளார்.
வல்லமை படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, சீனு ராமசாமி ஆகியோர் டீசரை வெளியிட்டனர்.
இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.