செய்திகள் :

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகத் திட்டங்கள்: அமைச்சா் சக்கரபாணி

post image

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன என தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கீரனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 13 துறைகளின் அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா். கோட்டாட்சியா் கண்ணன் வரவேற்புரை வழங்கினாா்.

இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராம ஊராட்சிகளில் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் பெறப்படும் தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாகவும், தாமதமாகும் மனுக்களுக்கு 45 நாள்களுக்கும் தீா்வளிக்க வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன என்றாா் அவா்.

மின் இணைப்பு, மின் இணைப்பு பெயா் மாற்றம், இருப்பிடச் சான்று உள்ளிட்டவை தொடா்பாக முகாமில் அளிக்கப்பட்ட தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

முன்னதாக, கீரனூா் பேரூராட்சியில் ரூ.2. 80 கோடியில் சாலை அமைப்பதற்கான பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் சசிக்குமாா், பிரசன்னா, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சத்தியபுவனா, ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணி, பொன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க