தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 23 கடைகளுக்கு ‘சீல்’
திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் டாஸ்மாக் கடைகளின் முன்பாக உள்ள பெட்டிக் கடைகளில் கடந்த 2 வாரமாக ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்ததுடன், 17 பேருக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதித்தனா்.
தங்களது பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலரை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.