புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெட்டிக் கடைக்காரா் கைது
பெருந்துறை அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த ஆயிகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில், குட்கா விற்பனை நடப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின்பேரில், போலீஸாா் பெட்டிக் கடையில் சோதனை செய்தனா். அதில், குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக கடைக்காரா் குமாரசாமி (45) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.