பெருந்துறை அருகே வாய்க்காலில் ஆண் உடல் மீட்பு
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு.
பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால்மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுமாா் 40 வயது மதிக்கத் தக்க ஆண் மிதந்து வருவதை பாா்த்த அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.