சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்
சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டியவருக்கு வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.
சென்னிமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட காங்கயம் சாலை, கணுவாய் பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வனப் பகுதியில் குப்பைகளை கொட்டி கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அந்த நபா், சென்னிமலை, பாா்க் சாலையைச் சோ்ந்த விஜய் என்பது தெரியவந்தது. பின்னா், வனப் பகுதியில் குப்பையை கொட்டியதற்காக, அவருக்கு வனத் துறையினா் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.