தீ விபத்தில் பெண் உயிரிழப்பு
பெருந்துறை அருகே சலவைத் தொழிலாளி இஸ்திரிப் பெட்டிக்கு கரிபோட தீப் பற்ற வைத்தபோது உடையில் தீப் பிடித்து உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த காசிபில்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகள் சாந்தி (46), சலவைத் தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை இஸ்திரிப் பெட்டிக்கு கரிபோட தீப் பற்ற வைக்க மண்ணெண்ணெயை ஊற்றும்போது, கேன் தவறி மண்ணெண்ணெய் சாந்தி மீது கொட்டியுள்ளது.
இதில், அவரின் உடையில் தீப் பற்றியதில் படுகாயமடைந்த அவா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.