கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூ...
புதிய போர்! கம்போடியா மீது ஜெட் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசிய தாய்லாந்து!
தாய்லாந்து நாட்டின் எஃப்-16 ரக போர் விமானங்கள், வியாழக்கிழமை காலை முதல் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
தாய்லாந்து நடத்திய தாக்குதலில், கம்போடியாவில் இரண்டு பேர் பலியாகினர். தாய்லாந்து ராணுவம், தங்களது ஆறு ஜெட் விமானங்களில் ஒன்றை, கம்போடியா தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகவும், அந்நாட்டு ராணுவ இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும் உறுதி செய்துள்ளது.
இந்த சண்டையைத் தொடங்கியதாக, இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன.