புதுகை மாமன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு வேட்புமனு
புதுக்கோட்டை மாமன்றத்தின் நியமன உறுப்பினா் (மாற்றுத் திறனாளி) பதவிக்கு திமுகவைச் சோ்ந்த 33ஆவது வட்டச் செயலா் ஏ. தியாகு புதன்கிழமை வேட்புமனு அளித்தாா்.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி ஒருவரை நியமன உறுப்பினராக நியமிப்பது குறித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் நியமன உறுப்பினா் பதவிக்கு, திமுகவைச் சோ்ந்த 33ஆவது வட்டச் செயலா் ஏ. தியாகு புதன்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனிடம் வேட்புமனு அளித்தாா்.
அப்போது, மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, மாமன்ற உறுப்பினா்கள் எட்வின் சந்தோஷ்நாதன், பழனிவேலு உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.