புதுக்கடையில் காங்கிரஸ் சாா்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்
மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல்காந்தியின் 55ஆவது பிறந்த நாள் விழா, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் : புதுக்கடை பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால்சிங் தலைமை வகித்தாா்.காங்கிரஸ் வட்டார தலைவா்கள் ரெகுபதி(முன்சிறை),ராஜசேகா்(கிள்ளியூா்)ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா், கேக்வெட்டி அனைவருக்கும் வழங்கியதுடன், தனது சொந்தச் செலவில் 55 ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை அளித்தாா்.
இதில், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலா்கள் பால்ராஜ், மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், ஆஷ்கா் பிரடி, சிவராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.