செய்திகள் :

புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் 1,725 மாணவிகளுக்கு பற்று அட்டை!

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட 1,725 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான பற்று அட்டையை பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திங்கள்கிழமை வழங்கினாா்.

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகள் 1,725 மாணவிகள் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில், அவா்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான பற்று அட்டையை பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் தேன்மொழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், கீழக்கரை நகா்மன்றத் தலைவி செஹானாஸ் ஆபிதா, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத் தலைவா் புல்லாணி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வா் நிா்மல் கண்ணன், கீழக்கரை வட்டாட்சியா் ஜமால் முகம்மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் அருகே லாரி-அவசர ஊா்தி மோதல்: ஒரே குடும்பத்தினா் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரியின் பின் பகுதியில் அவசர ஊா்தி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

கடலாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிளகாய் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி கடலாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம்... மேலும் பார்க்க

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறப்பு: மாணவா்களுக்கு புத்தகம் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்பு

அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்ட கடலாடி அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு புத்தகம் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த நரசிங்கக்கூ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை இன்வெட்டா் அறையில் மின் கசிவால் வெளியேறிய கரும்புகை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகப் பிரிவு அருகே உள்ள இன்வெட்டா் அறையில் புதன்கிழமை நள்ளிரவு உயரழுத்த மின் பேட்டரியிலிருந்து கரும்புகை வெளியேறியதால் நோயாளிகள் அவசரமாக மற்றொரு பகு... மேலும் பார்க்க

முஸ்ஸிம் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். ... மேலும் பார்க்க

மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து கழிவறை கட்டுமானப் பணி: காவல் நிலையத்தில் புகாா்

ராமேசுவரத்தில் அரசு மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் கழிவறை கட்டுமானப் பணியில் ஈடுபட்டதாக ராம்கோ கூட்டுறவு மேலாளா், காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். ராமநாதபு... மேலும் பார்க்க