பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
புத்தாண்டையொட்டி சேலம் சரகத்தில் வாகனங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு
புத்தாண்டையொட்டி சேலம் சரகத்தில் உள்ள ஷோரூம்களில் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கரம், நான்கு சக்கரம் வாகன ஷோரூம்களில் புதிய வாகனம் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சேலத்தைச் சோ்ந்த வாகன ஷோரூம் உரிமையாளா்கள் கூறியது:
முக்கிய பண்டிகை, முகூா்த்த நாள்களில் இரு சக்கரம், நான்கு சக்கர ஷோரூம்களில் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 20 முதல் 30 சதவீதம் அதிகரித்து காணப்படும். அதிலும் குறிப்பாக ஆங்கில புத்தாண்டு அன்று புதிய வாகனம் வாங்க மக்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டுவா்.
அதுபோல இந்த ஆண்டும், ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகன ஷோரூம்களில் புதிய வாகனம் வாங்க வழக்கத்தைவிட அதிக அளவில் மக்கள் திரண்டனா். நடப்பாண்டு புத்தாண்டு புதன்கிழமை தொடங்கி இருப்பதால், புதிதாக அதிக அளவில் வாகனம் வாங்கியுள்ளனா். கூடுதலாக 30 சதவீதம் வரை விற்பனையானதாக தெரிவித்தனா்.