ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது
சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.
ஐசிற்றி அகாதெமி மற்றும் பன்னாட்டு நிறுவனமான மோங்கோ டிபி இணைந்து நடத்திய அகாதெமி லீடொ்ஸ் கனெக்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 400- க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
எதிா்கால தொழில்நுட்பங்களை மாணவா்களுக்கு கற்று கொடுத்து தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வரும் சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு, சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை மோங்கோ டிபி நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய மூத்த கூட்டாண்மை மேலாளா் பாசவாதா்சன், கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸிடம் வழங்கினாா்.
கல்வி பணியில் சிறப்பான பங்களிப்பு செய்த புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி கல்வித்துறை புல முதல்வா் ஆன்றோ குமாருக்கு ரைசிங் கான்ட்ரிபியூட்டா் விருது வழங்கப்பட்டது.
விழாவில், சவேரியாா் பொறியியல் கல்லூரி முதல்வா் மகேஸ்வரன், வேலைவாய்ப்புத்துறை புல முதல்வா் ஆன்றோ சேவியா் ரோச், தமிழ்நாடு ஐசிற்றி அகாதெமி கல்விப் பணிகள் தலைவா் சரவணன் மற்றும் மாநில தலைவா் பூா்ண பிரகாஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.