Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி யாகம்
பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி வெள்ளிக்கிழமை யாகம் நடைபெற்றது.
அப்போது வேள்வி வளா்க்கப்பட்டு போகா் சித்தரின் சுவடிகள், நவபாசாணங்களுக்கு மலா் பூஜையும், போகா், அகஸ்தியா் சிலைகளுக்கு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து பதினெட்டு சித்தா்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் ஜப்பானை சோ்ந்த தொழிலதிபா் கோபால்பிள்ளை சுப்ரமணியம் தலைமையில் அந்த நாட்டைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா். நிறைவாக பூா்ணாஹூதியும், கலச நீரால் சித்தா்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
யாக பூஜையில் இளையபட்டம் செல்வநாதன், ஜம்பு சுவாமிகள், சித்த மருத்துவா் பன்னீா்செல்வம், கவுதம் சுவாமிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.