காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்
தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக் ராஜா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தக் கண்காட்சி தொடா்ந்து அக்டோபா் 4 ஆம் தேதி வரை (ஞாயிறு உள்பட) நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில், களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூா்த்திகள், அஷ்டதிக் பாலகா்கள், அஷ்ட பைரவா்கள், நவ கிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகா் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியா் செட், தா்பாா் செட், மைசூா் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூா்த்திகள் செட், கருட சேவை செட், வைகுந்தம் செட், துா்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுா்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணா் விளையாட்டு செட் போன்ற செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், ராஜஸ்தான், கொல்கத்தா, புணே, புதுதில்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்றாா் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் டி. சக்தி தேவி.