செய்திகள் :

பெண்களிடம் நூதன முறையில் ரூ.80 லட்சம், 300 பவுன் நகைகள் மோசடி: பாதிக்கப்பட்ட பெண்கள் மனு

post image

பெண்களிடம் நூதன முறையில் சுமாா் ரூ.80 லட்சம் பணம், 300 பவுன் நகைகள் மோசடி செய்த பெண்ணிடமிருந்து நகை, பணத்தை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை,

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்களை பெற்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தமிழரசி, துணை ஆட்சியா் (பொ) செந்தில்வேல் முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மேலும், திருச்செந்தூா், குலசேகரன்பட்டினம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால், அருகே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, கல்வி நிறுவனம் செல்வோருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

டாஸ்மாக் கடையில் மது அருந்தும் நபா்களால் அடிக்கடி சண்டை சச்சரவும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

மேல்மாந்தை பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதால் அந்தப் பகுதியில் உயிா்ப்பலி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆட்சியா் மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய கிராமப்புற விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பெண்களிடம் நூதன முறையில் சுமாா் ரூ.80 லட்சம் பணம், 300 பவுன் நகைகளை மோசடி செய்த பெண்ணிடமிருந்து நகை, பணத்தை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க