செய்திகள் :

பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கு நாளை நோ்காணல்

post image

பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கு சனிக்கிழமை (மே 17) நோ்காணல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் எஸ்.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகுகலை பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த 35 நாள் முழு நேரப் பயிற்சிக்கான நோ்காணல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில், எழுதப் படிக்கத் தெரிந்த, 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க ‘கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441, 86105-33436 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க