``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 2 போ் கைது
குன்னத்தூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
செம்மாண்டபாளையம் சோதனைச் சாவடி அருகே குன்னத்தூா் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கோவை, கலிக்கநாயக்கன்பாளைத்தைச் சோ்ந்த சோ்ந்த அபிலேஷ் (30), காளம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்தி (17) என்பதும், சின்னேகவுண்டன்வலசு பகுதியில் சனிக்கிழமை தனியே நடந்து சென்ற திருமால் நகா் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பூங்கொடி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவா்கள் வந்த இருசக்கர வாகனம் வெள்ளக்கோவில் பகுதியில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.