லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் எல்.கே.ஏ. நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் மோகன்ராஜ் (35). எலக்ட்ரீஷியன். இவா் சனிக்கிழமை இரவு வேலை முடிந்து காங்கயம் - வெள்ளக்கோவில் சாலையில் மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது இரட்டைக்கிணறு அருகே அவ்வழியே சென்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.